பேசத்தெரிந்த நிழல்கள்

இங்கு நான் சினிமா பரிந்துரைக்கு வரவில்லை பதிலாக நான் படித்த ஒரு புத்தகத்தை பரிந்துரைகிறேன்

திரு எஸ் ராமகிருஷ்ணன் தமிழ் எழத்து உலகில் திவரமாக பயணிப்பவர்,இவர் ஒரு தேசாந்தரி, திரைகதை ஆசிரியர் கூட இவர் உலக சினிமா பற்றி பல நூல்கள் எழுதி உள்ளார் அதில் நான் சமீபமாக படித்தது

பேசத்தெரிந்த நிழல்கள்

இந்த புத்தகம் சினிமா குறித்த விமர்சன கட்டுரைகள் அல்ல, இவை ஒரு படைப்பாளியின் குறிப்புக்கள் அல்லது அவதானிப்புகள்.
இதில் சினிமா மற்றும் இல்லாமல் டாகுமெண்டரி மற்றும் திரை ஆளுமைகள் பற்றியும் நேர்காணல்களும் விரிவாக எழுதி உள்ளார்.

இதில் இஸ்ரேல்-பாலஸ்தீன் conflict மையமாக கொண்ட Eran rikils இயக்கிய (Lemon tree) படம், அரசியல் எழுமிச்ச பலத்தை கூட விட்டுவைபதிலை என்கிறார்.

Winged migration & Ashes Snow டாகுமெண்டரி வர்ணனைகள் அருமை.

ஆசியா: சினிமாவின் குவியம் என்ற தலைப்பில் எப்படி ஆசிய சினிமா உலகத்திற்கு முன்னோடியாக இருக்கிறது என்பதை முன்வைக்கிறார்.

இவர் எழுத்தாளர் என்பதால் பல எழுத்தாளர்களின் பல (biographies) பரிந்துரைக்கிறார்.

இதில் சுவாரஸ்யமான ஒரு கட்டுரை தமிழ் சினிமாவின் முதல் lip to lip kiss அதுவும் ஒரு ஆங்கில நடிகை கூட யார் எந்த படம் என்பது புத்தகத்தை படித்து பாருங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

அகிரா குரோசோவ பற்றி பதிவு அருமை.
துறவிகளின் தனிமை குரல்: பல புத்த சினிமாக்களை அறிமுகம் செய்து வைக்கிறார் இவ்வளவு சினிமாவா என்று எண்ண தோன்றும்

இந்த புத்தகம் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி எல்லா தரப்பிற்கும் ரசிக்கும் படி உள்ளது

Leave a comment