மகாபாரத கதைகளை என் சிறு வயது வீட்டில்,கோயில்களில்,தொலைக்காட்சியில் என்று பார்த்தும் கேட்டும் இருக்றேன். அனால் அது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாய் தெரியவில்லை அதுவும் எல்லோரும் அதே கதையை திரும்பி திரும்பி சொல்கிறார்கள், ஏன் மகாபாரதம் சுற்றி இவ்வளவு கதைகள் இருகின்றது என்று புரியாமலும் புதிராகவும் இருந்தது.
இந்த புரிந்தும் புரியாமலும்தான் என்னை அதன்பால் ஈர்த்தது
என் அளவில் கலை அல்லது ஒரு இலக்கிய படைப்பு தன்னில் இருக்கும் பண்பாட்டை, கலாச்சாரத்தை, வரலாற்றை மற்றும் உலகில் தோன்றிய எந்த உயிரின்பால் காட்டும் பேரன்பையும் அறத்தையும் வலியுறுத்துவது.
எப்பொழுதும் மக்களின் வரலாறும், கலையும், பண்பாடும், சுற்றுச்சூழல் அறிவும் அடிப்படையாக அறிந்து கொள்ளாமல் ஆன்மிகத்தின் திசையில் திரும்பமுடியாது,
நாம் வரலாறோ பண்பாடோ எதை எடுத்தாலும் முன் வருவது இதிகாசங்கள்தான், அதுவும் பாரதம் பல கிளைகள் முளைத்த விரிந்த ஒரு மாபெரும் வ்ரிக்க்ஷம், அதில் ஒரு பாதசாரியாக இலைபாரவேண்டும் என்று ஆசை
எனக்கு மகாபாரத்தில் பல கேள்விகள் எப்பொழுதும் உண்டு, அதில் இருக்கும் ambiguity relationships,meta fiction characters மற்றும் பல தர்க்கம் சார்ந்த நிலைபாடுகள், எது தர்மம் போன்ற கேள்விகள்.
சரி மகாபாரதம் படிக்கலாம் என்றால் எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று பார்க்கும்பொழுது திரு. எஸ் ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் இணையதளங்கள் எண்ணற்ற நூல்களை பரிந்துரை செய்தன
http://www.sramakrishnan.com/?p=3337
ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி தம் இணையத்தில் சில பரிந்துரைகளை
http://www.amitwrites.com/best-mahabharata-books
என் முதல் மகாபாரத புத்தகமாக “RK Narayanan – The Mahabharatha”